திருப்பூா் மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள்; மாணவா்களுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள்; மாணவா்களுக்கு அழைப்பு
X

Tirupur News- திருப்பூா் மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. (கோப்பு படங்கள்)

Tirupur News- மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளாா்.

Tirupur News,Tirupur News Today- தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் திருப்பூா் மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் ஜனவரி 10-ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் உரிய படிவத்தை பூா்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் அல்லது துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பாக தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொருப் போட்டிக்கு தலா ஒருவா் வீதம் மொத்தம் 3 மாணவா்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.

போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன் மாணவா்களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப்படும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!