திருப்பூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; பெற்றோரை அலைக்கழிப்பதாக புகார்

திருப்பூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; பெற்றோரை அலைக்கழிப்பதாக புகார்
X

Tirupur News,Tirupur News Today- அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையில்,  பெற்றோர்களை அலைக்கழிப்பதாக புகார் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுக்கப்படுவதாகவும், பெற்றோர்களை அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today-திருப்பூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுக்கப்படுவதாகவும், பெற்றோர்களை அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடரும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த, 12ம் தேதி ஆறு முதல் பிளஸ் 2 வரை யிலான பள்ளிகளும், கடந்த 14ம் தேதி துவக்கப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளி செயல்பாடுகள் துவங்கிய நிலையில், இன்னமும் பள்ளிகளையும், வகுப்புகளையும் தேடி பெற்றோர் சிலர் அலைகின்றனர். சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு, இடநெருக்கடியை காரணம் காட்டி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தலைமை ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இதனால், கல்வியாண்டு துவங்கிய போதும், 6, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் படாத பாடுபடுகின்றனர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கு வருவோரை திருப்பி அனுப்பிய சில பள்ளிகளில், மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவத்சலம் கூறியதாவது: எக்காரணத்தை முன்னிட்டும் அரசுப்பள்ளி களில் சேர்க்கை மறுக்கக்கூடாது. எவ்வளவு மாணவர்கள் வந்தாலும், மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். தேவையெனில் அதற்கென ஆசிரியர் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அரசு பள்ளியை நாடி வரும் மாணவ, மாணவி யருக்கு கட்டாயம் 'சீட்' வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளியில் மாணவ, மாணவியரை சேர்க்க மறுத்தால், மாவட்டகல்வி அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். அம்மாணவர் அதே பள்ளியில் இணைய தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தனியார் பள்ளிகள் பலவற்றில், கல்விக் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், இந்த பள்ளிகளில் சேர்த்துள்ள நடுத்தர வசதி உள்ள பெற்றோர் பலரும், தங்களது பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்துவிட முடிவு செய்வதும் நடந்து வருகிறது. ஆனால், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை, கல்வி கட்டணம் செலுத்தப்படாமல், நிலுவையில் இருப்பதாக கூறி, தனியார் பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் தர மறுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!