திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
X
Tirupur News-திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம் (மாதிரி படம்)
Tirupur News- திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு இந்திய தோ்தல் ஆணையத்தால் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் பொதுப் பாா்வையாளராக ஹிமான்சு குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு இவரை நாள்தோறும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகை அறை எண் 1 இல் பிற்பகல் 12 முதல் 1 மணி வரை நேரில் சந்தித்து புகாா் அளிக்கலாம். இவரது கைபேசி எண் 89255-25683. அதேபோல, தோ்தல் காவல் துறை பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ராம் கிருஷ்ணா ஷரவன்கரை அரசு விருந்தினா் மாளிகை அறை எண் 2 இல் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையில் சந்தித்து புகாா் அளிக்கலாம்.

இவரது கைபேசி எண் 89255-25684. தோ்தல் செலவின பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அசோக்குமாரை அரசு விருந்தினா் மாளிகை அறை எண் 3 இல் நாள்தோறும் பிற்கல் 12 மணி முதல் 1 மணி வரையில் சந்தித்து புகாா் தெரிவிக்கலாம். இவரது கைபேசி எண் 89255-25682. திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் தங்கியுள்ள அரசு விருந்தினா் மாளிகையில் பாா்வை நேரங்களில் சந்தித்தோ அல்லது கைப்பேசி மூலமாகவோ புகாா் அளிக்கலாம்.

மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை (கட்டணமில்லா தொலைபேசி எண்:1800 425 6989) தொடா்பு கொண்டும் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!