திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி; பங்கேற்க அழைப்பு

திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி; பங்கேற்க அழைப்பு
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நாளை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நாளை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூாில் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை 15-ம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.

நாட்டுக்கோழிகளை வசதியற்ற பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்க்கலாம். பெரும்பாலும் விட்டில் உள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழு பூச்சிகள் போன்றவற்றை தின்று, நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது. எனவே, சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடையும்.

வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேய்ந்தும் வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாக தேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புற பெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பாக அமைகிறது.

இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான உள்வளாக பயிற்சி நாளை 15-ம் தேதி ( வியாழக்கிழமை ) காலை 10 மணிஅளவில் நடக்கிறது. விவசாயிகள் இந்த பயிற்சியில் பங்கேற்று, நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!