மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டம் ஒரு நாடகம்; திருப்பூரில் ஜி.கே.வாசன் ஆவேசம்

மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டம் ஒரு நாடகம்; திருப்பூரில் ஜி.கே.வாசன் ஆவேசம்
X

Tirupur News- தமாகா தலைவர் ஜிகே வாசன் (கோப்பு படம்)

Tirupur News- மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகம் என்று, திருப்பூரில் ஜிகே வாசன் கூறினார்.

Tirupur News,Tirupur News Today- மத்திய அரசை கண்டித்து தி.மு.க., நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளை 2-வது திட்டத்தில் இணைக்க வேண்டும். மத்திய அளவில் பெரும்பான்மையாகவும் பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

தி.மு.க. அரசு மத்திய அரசை கண்டித்து பாராளுமன்றத்தில் நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகத்தை தொடங்கியதாகவே அர்த்தம். 2021 சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த கட்சிகளுடன் நட்புறவில் இருக்கிறோம்.

மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து நாட்டின் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ம் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தியா கூட்டணி தொடக்கத்திலேயே முரண்பாடுடன் தொடங்கப்பட்டது. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள். முதலமைச்சர் ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வசூல் வெள்ளம்: ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை!