உடுமலை; பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

உடுமலை; பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
X

Tirupur News- தீபாவளிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News- உடுமலை பொள்ளாச்சியில் இருந்து, அல்லது பொள்ளாச்சி வழியாக தீபாவளிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் சந்திப்பை அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர். வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், மூணாறு, அமராவதி, ஆழியார் அணைகள் போன்ற சுற்றுலா பகுதிகளும், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில், திருமூர்த்தி மலை கோவில் போன்ற, ஆன்மிக தலங்கள் உள்ளன. அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் முருகன் கோவில், கொடைக்கானல் சுற்றுலா பகுதிகள் உள்ளன.

புதுச்சேரியின் திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியில் பழமை வாய்ந்த கோவில்களில் தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், வேளாங்கண்ணி, தேவாலயம் போன்ற பல்வேறு யாத்திரை மையங்கள் உள்ளன.

இந்நிலையில் பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலை,பொள்ளாச்சி, சென்னை - தாம்பரம், எழும்பூர் இடையே நேரடி ரயில் சேவை இல்லை. எனவே, பொள்ளாச்சி - தாம்பரம் அல்லது சென்னை எழும்பூர் (பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக) தினசரி இரவு நேர ரயிலை இயக்க வேண்டும். நவம்பரில், தீபாவளி சிறப்பு ரயிலாக இந்த ரயிலை இயக்க வேண்டும். இருமார்க்கத்தில் இருந்தும் இரவு 8 மணிக்கு ரயில் புறப்பட வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story