செங்கல் விலை உயருமா? தொழிலாளர் பற்றாக்குறையால் அச்சம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில், தாராபுரம், கொண்டரசம்பலயம், திருமலயம், தளவாய்பட்டினம், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில், 70க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. தினசரி 40 லட்சம் செங்கல் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. செங்கல்கள், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், திருப்பூர், பல்லடம், அவினாசி உள்ளிட்ட இடங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற வெளிமாவட்ட, பிற மாநில தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு வரவில்லை. இதனால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, செங்கல் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதன் எதிரொலியாக அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என, செங்கல் சூளை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu