நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜ. கட்சியினர் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜ. கட்சியினர் விருப்ப மனு
X

தாராபுரத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜ கட்சியினர், விருப்ப மனு வழங்கினர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, பா.ஜ.க, சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், தாராபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட பொறுப்பாளரும், விவசாய அணியின் மாநில பொதுச் செயலாளருமான விஜயராகவன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'இன்னும் சில மாதங்களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர, விருப்ப மனுக்களை மாவட்ட கட்சி அலுவலகத்தில் கொடுக்கலாம்' என்றார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால கிருஷ்ணன், குட்டியப்பன், ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!