ஷட்டர் பழுது: உப்பாறு அணைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ஷட்டர் பழுது: உப்பாறு அணைநீர் வெளியேறுவதில் சிக்கல்
X

பழுதான மதகு 

ஷட்டர் பழுதடைந்துள்ளதால், நிரம்பிய உப்பாறு அணை நீரை, மதகுகள் வழியாக வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணை, 20 ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு அணையின் முழு கொள்ளளவான, 24 அடியை எட்டியது. இதனால், அணையில் இருந்து மெயின் ஷட்டர் வழியாக தண்ணீர் உப்பாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் அணையின் இடது, வலது புறங்களில் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் இடதுபுறம் உள்ள ஷட்டர் பழுது ஏற்பட்டதால், வாய்க்கால் நீர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஷட்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 'ஷட்டர் பழுது நீக்கப்பட்டவுடன், விவசாயம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படும்' என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!