விதை நெல் உற்பத்தி நிலையத்தில் விவசாய கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

விதை நெல் உற்பத்தி நிலையத்தில் விவசாய கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
X

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, தாராபுரம் நெல் உற்பத்தி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

தாராபுரம், தனியார் விதை நெல் உற்பத்தி நிலையத்தில், விவசாய கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில், இறுதியாண்டு விவசாய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு, தாராபுரம் நெல் உற்பத்தி நிலையத்தில் களப்பயிற்சி வழங்க, பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, இறுதியாண்டு விவசாய படிப்பு படித்து வரும் மாணவர்கள், தாராபுரம் நெல் உற்பத்தி நிலையத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, விதையின் தரம், அவற்றின் தரத்தை பரிசோதிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கினார். விதைச்சான்று அலுவலர்கள் சர்மிளா, கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். மாணவர்கள், விதை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!