தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’

tirupur News, tirupur News today- திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் திடீரென மாயமானார். தாராபுரத்தில் இன்று நடந்த இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
X

tirupur News, tirupur News today- பெற்றோர் நிச்சயித்த ஆணின் கரம் பிடிக்க விரும்பாத மணப்பெண், திருமண நாளில் மாயமானது, தாராபுரத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாழைக்கரையை சேர்ந்த 24 வயதான பட்டதாரி இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இன்று திருமணம் நடைபெற இருந்தது.அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்திருந்தனர். உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்ததுடன், தாராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு வழங்க அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டு இருந்தது.

நேற்றிரவு முதலே, திருமண மண்டபம் களை கட்டத் துவங்கியிருந்தது. மணமகன், மணமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும், மண்டபத்தில் குழுமியிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த உறவினர்களும், நண்பர்களும் உற்சாகமாக பேசி, இரவைக் கழித்தனர். விடிந்தால், திருமணம் என்ற நிலையில், பலரும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை திடீரென மணப்பெண் மாயமானார். மண்டபத்தில் இருந்த அவரை காணாமல் அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். அவரை உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த இரு வீட்டாரது உறவினர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தியதில் மாயமான மணப்பெண் தாராபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இன்று பெற்றோர் நிச்சயித்தபடி நடக்க இருந்த திருமணம் பிடிக்காமல், அந்த வாலிபருடன் மணப்பெண் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்றிரவு முதல் திருமண மண்டபம் களை கட்டியிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் இன்று களை இழந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள், அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சினிமாவை மிஞ்சும் நிகழ்வுகளாக, திருமணம் நடக்க சில மணி நேரங்கள் இருந்த நிலையில், திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண், யாருக்கும் தெரியாமல் ஏமாற்றிச் சென்றிருப்பது, சினிமா காட்சிகளையே மிஞ்சுவதாக இருப்பதாக, திருமணத்துக்கு வந்த பலரும், புலம்பியபடி சென்றனர்.

Updated On: 23 March 2023 4:31 PM GMT

Related News