தாராபுரத்தில் விதி மீறிய வாகனங்கள் போலீசார் பறிமுதல்

தாராபுரத்தில் விதி மீறிய வாகனங்கள் போலீசார் பறிமுதல்
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஊரடங்கு, விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தாராபுரத்தில் கொரோனா ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய டூ வீலரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அனைத்து முக்கிய ரோடுகளிலும் பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டு, குறிப்பிட்ட இடைவெளி மட்டும் விடப்பட்டு உள்ளது

மேலும், முக்கிய பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் விதிமுறை மீறி, வெளியில் சுற்றிய 5 டூ வீலர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கு வழிக்காட்டுதல் விதிமுறைகளை கடைப்பிடித்து கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!