ரூ.1.62 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

ரூ.1.62 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
X

பொன்னாழிபாளையத்தில் அனுமந்தராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

தாராபுரத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 1.62 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த பொன்னாழிபாளையத்தில், அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 13 ஏக்கர் புஞ்சை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. மாநிலம் முழுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகினறன. அதன்படி, தாராபுரத்திலும் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நில அளவை பணி, சில நாட்களுக்கு முன் நடந்தது. தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேனகா மற்றும் உதவி ஆணையர் சதீஷ், செயல் அலுவலர், கோவில் அறங்காவலர்கள் முன்னிலையில், ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலம் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு, 1.62 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


Tags

Next Story
ai in future agriculture