தாராபுரத்தில் அனுமதி்யின்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

தாராபுரத்தில் அனுமதி்யின்றி   கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
X

கிராவல் மண் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

தாராபுரத்தில் அனுமதி்யின்றி கிராவல் மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தாராபுரம் பகுதியில் அமராவதி ஆறு செல்வதால், இரவு நேரத்தில் ஆற்றில் அனுமதியின்றி அடிக்கடி மணல் கடத்தல் செய்யப்படுகிறது.

இதேபோல், கிராவல் மண் கடத்தலும் அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தாராபுரம் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.,

இருந்த போதும் கடத்தல் என்பது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் .தாராபுரம் செட்டிபாளையம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கிணற்று மண் மற்றும் உடைக்கல் ஆகியவை கடத்தி வந்த லாரியை பிடித்து, போலீஸார் விசாரித்தனர்.

போலீஸார் விசாரணையில், அரசு அனுமதியின்றி, கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!