தாராபுரம் காய்கறி சந்தை இடமாற்றம்

தாராபுரம் காய்கறி சந்தை இடமாற்றம்
X
தாராபுரம் உடுமலை ரோட்டில் இயங்கி வந்த தினசரி காய்கறி சந்தை நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. தாராபுரத்தில் உடுமலை ரோட்டில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு அதிகளவில் பொது மக்கள் கூடுகின்றனர். தாராபுரத்தில் கொரோனா மிக வேகமாக பரவ துவங்கியைத தொடர்ந்து, காய்கறி சந்தையை இடமாற்றம் செய்ய தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார். தாராபுரம் நகராட்சி கமிஷனர் சங்கர் மேற்பார்வையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. சந்தையை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!