சூரியகாந்தி விதைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்
Sunflower Seeds Price - திருப்பூர் மாவட்டத்தில், ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம், வெள்ளக்கோவி்ல், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில், சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. வெள்ளகோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூ;டத்தில், சூரியகாந்தி விதைகள், ஏலமுறையில், நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்தவார ஏலத்தில், ஒரு கிலோ சூரியகாந்தி விதை, 65முதல்73ரூபாயாக விற்பனையானது. இதன் சராசரி விலை 66ரூபாய்ஆக இருந்தது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
உக்ரைன் போர் காரணமாக, அங்கிருந்து உலக நாடுகளுக்கு சூரியகாந்தி விதைகள் ஏற்றுமதி செய்வது, தற்போது தடைபட்டுள்ளதால், இதன் எண்ணெய்விலை உயர்ந்துள்ளது.தற்போது சூரியகாந்தி எண்ணை விலை, கிலோவுக்கு 230ரூபாய்ஆக உள்ளது. இதர சமையல் எண்ணை வித்துகளில் தயாரிக்கப்படும் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.
சூரியகாந்தி விதைகளுக்கு போதிய விலை கிடைக்காதது, சூரியகாந்தி பயிரிட்டு விதைகளை அறுவடை செய்த விவசாயிகளுக்கு போதிய விலை விற்பனையில் கிடைக்காதது ஏமாற்றத்தை தந்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu