கோவை மாணவி மரணம்: நீதி கேட்டு தாராபுரத்தில் போராட்டம்

கோவை மாணவி மரணம்: நீதி கேட்டு தாராபுரத்தில் போராட்டம்
X

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அண்ணா சிலை அருகே,  மாணவ-மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாணவி தற்கொலை தொடர்பாக, தாராபுரத்தில், கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சின்மயா பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தாராபுரம் அண்ணா சிலை அருகில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நீதிகேட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புச்சட்டை அணிந்து, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Tags

Next Story
ai healthcare technology