விழிப்புடன் இருங்க…மாணவிகளுக்கு 'அட்வைஸ்'
தாராபுரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில், பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து தொடர்பான விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது போக்குவரத்து ஆய்வாளர் ஞானவேல் பேசினார். '18 வயதுக்கு குறைவான மாணவிகள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒட்டக்கூடாது. நண்பர்களுடன் வெளியே செல்லும் போது வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அறிமுகமில்லாத நண்பர்கள், உறவினர்கள் தவறாக நடக்க முயற்சிப்பதாக தெரிந்தால், உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ள பெண் போலீஸ் மற்றும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.
பள்ளியை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது முன்பின் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது; அவர்கள் வாகனத்தில் பயணிக்கக் கூடாது. தொலைபேசி எண்களை பரிமாறக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu