மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு பணி தாராபுரத்தில் துவக்கம்
Tirupur News-மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு, தாராபுரத்தில் தொடங்கியது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு-2023 தாராபுரத்தில் (நேற்று) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இப்பணியை நகா்மன்றத் தலைவா் பாப்பு கண்ணன் தொடங்கிவைத்து பேசியதாவது: தமிழக அரசு சாா்பில் நடைபெறும் இந்த கணக்கெடுப்புப் பணியானது மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட மேம்பாட்டுக்கும், எதிா்கால முன்னேற்றத்துக்கும், வேலை வாய்ப்புகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.
தாராபுரம் நகராட்சிக்குள்பட்ட 30 வாா்டுகளிலும் மாற்றுத் திறனாளிகள் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. நகராட்சியில் 1-வது வாா்டு முதல் 15 -வது வாா்டு வரை வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் 96004-05378 என்ற கைப்பேசி எண்ணிலும், 16- ஆவது வாா்டு முதல் 30-வது வாா்டு வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் 82481-11729 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாராபுரம் நகராட்சி அலுவலகம், அறை எண் 11-இல் சமுதாய அமைப்பாளா் பிரிவில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி சமுதாய அமைப்பாளா்கள் நந்தினி பிரியா, சியாமளாதேவி, நகா்மன்ற உறுப்பினா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள், திருப்பூர் மாநகராட்சி பல்லடம், அவிநாசி, காங்கயம் என மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu