தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் தேர்ச்சி

தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர்  அரசு பள்ளி மாணவி மாநில அளவில் தேர்ச்சி
X

மாணவி சுபிக்சா

தேசிய திறனாய்வு தேர்வில், திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூர் அரசுபள்ளி மாணவி சுபிக்‌ஷா, மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு போட்டி நடைபெற்றது. இதில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தூர் நகர சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு, முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்த தேர்வில், சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி ஜி.சுபிக்சா, மாநில அளவில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து உள்ளார். வெற்றி பெற்ற மாணவியை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவிக்கு 9ம் வகுப்பு முதல் ப்ளஸ்2 வரையில் , கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!