சத்தியமங்கலம் காட்டில் இருந்து வெளியேறுகிறதா சிறுத்தை?

சத்தியமங்கலம் காட்டில் இருந்து வெளியேறுகிறதா சிறுத்தை?
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறுவதாக, சந்தேகிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறுவதாக, சந்தேகிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த, 24ம் தேதி பதுங்கியிருந்த சிறுத்தை வரதராஜ், மாறன் என்ற இரண்டு விவசாயிகளை தாக்கியது. வனத்துறையினர் சிறுத்தை இருந்த இடத்தை சுற்றி வளைத்து கண்காணித்தனர். இருப்பினும், சிறுத்தை இரவோடு இரவாக தப்பியது.

திருப்பூர் நகரப்பகுதியான அம்மாபாளையத்தில் உலவிய போது, கடந்த, 27ம் தேதி, வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட எல்லையான நம்பியூர் காந்திபுரம் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

வன ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது;

திருப்பூர் மாவட்ட எல்லையில் இருந்து, 30 கி.மீ., தொலைவியில், 1455 ஏக்கர் நிலப்பரப்பில், சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. கடந்த, 2013ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதிய கணக்கெடுப்பு படி இங்கு, 30 புலிகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூர், பி.ஆர்.ஹில்ஸ் மற்றும் ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவுக்கு புலிகள் எளிதாக புலம் பெயர்ந்து இரை தேட செல்லும்.

அந்த சமயத்தில், 60 சதுர கி.மீ., சுற்றளவுக்கான தங்களது புதிய வாழ்விடத்தையும் ஏற்படுத்திக் கொள்ளும். இதன் விளைவாக, கடந்த, 10 ஆண்டில், புலிகளின் எண்ணிக்கை, 80 ஆக உயர்ந்துள்ளது என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. புலிகள் எண்ணிக்கை இரட்டிப்பானதை பாராட்டி, சத்தியமங்கலம் புலிகம் காப்பகத்துக்கு, சர்வதேச விருது கூட வழங்கப்பட்டது.

புலிகள் தங்களது வாழ்விடத்தை விரிவுபடுத்திக் கொண்டதால், அங்கு ஏற்கனவே வாழ்விடத்தை உருவாக்கியுள்ள புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்கினங்களோடு, சண்டடையிட்டு அவற்றை விரட்டி விடும். அந்த வகையில், வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் தான், குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புண்டு. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!