அரிசி விநியோகம் சரியில்லை: பாரதிய ஜனதா குற்றசாட்டு

அரிசி விநியோகம் சரியில்லை: பாரதிய ஜனதா குற்றசாட்டு
X

பாஜக கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

மத்திய அரசு வழங்கும் இலவச அரிசி விநியோகம், தமிழகத்தில் சீராக இல்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தாராபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் குட்டியப்பன் வரவேற்றார். மாவட்ட தலைவர் பொன் ருத்திரகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 'நாட்டில், 130 கோடி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த ரூ. 50 கோடி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி மத்திய அரசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்ட பகுதியில் அந்த அரிசி முறையாக வழங்கப்படுவதில்லை; முறையாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், மத்திய அரசால் விவசாயிகளுக்கு போதிய உரம் வழங்கியும், ஒரு சிலர் செயற்கை உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், கண்வலிக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு தமிழக அரசு வெள்ள நிவாரண தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare