காலி பணியிடங்களை நிரப்பணும்! சங்க கூட்டத்தில் தீர்மானம்

காலி பணியிடங்களை நிரப்பணும்!  சங்க கூட்டத்தில் தீர்மானம்
X

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆலோசனைக்கு கூட்டம்.

ஆதிதிராவிடர் நலத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம், தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், ஊடகப்பிரிவு செயலாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதிதிராவிடர் நலத்துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதி துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். விடுதிகளில், இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விடுதி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்