சாக்கடை அடைப்பை சாி செய்ய கோரிக்கை

சாக்கடை அடைப்பை சாி செய்ய கோரிக்கை
X
தாராபுரத்தில் சாக்கடை பராமாரிப்பு பணி தாமதம் காரணமாக பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தா்கள் சிரமப்படுகின்றனர்.

தாராபுரம் உடுமலை ரோட்டில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தாராபுரம்,கொண்டரசம்பாளையம், சேரன் நகா், என்.ஏ.எஸ் நகா், குறிஞ்சி நகா் பகுதியை சேர்ந்த பக்தா்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோவிலின் முன்பாக செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாக்கடை கழிவு நீா் சாலை ஓரத்திலும், கோவிலை சுற்றிலும் தேங்கி நிற்க தொடங்கியது.

இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகமானது. எனவேகோவிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் அருகில் உள்ள கடைக்காரா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் என அனைவரும் கொசுக்கடிக்கு உள்ளாகின்றனா். இதனால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமதிற்குள்ளாகின்றனா். அங்கு டெங்கு உட்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை அடைப்பை சரிசெய்வதோடு, கோவிலை சுற்றி தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Tags

Next Story
ai in future agriculture