தாராபுரத்தில் ராமநவமி விழா

தாராபுரத்தில் ராமநவமி விழா
X
தமிழ்நாடு விசுவ இந்த பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், தாராபுரத்தில் ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு விசுவ இந்த பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், ஸ்ரீ ராமநவமி விழா தாராபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு, கிராம கோவில் பூசாரி பேரவையின் திருப்பூா் தெற்கு மாவட்ட அமைப்பாளா் குருதிருமலைசாமி தலைமை வகித்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோட்ட அமைப்பாளா் சின்னக்குமரவேல், மாவட்டதலைவா் சங்கர கோபால், மாவட்ட செயலாளா் ஸ்ரீராம் உள்ளிடவர்கள் முன்னிலை வகித்தனா். இவ்விழாவில் ராமா் பட்டாபிஷேக படம் வைத்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட செயலாளா் மயில்சாமி, சுப்பராயன், கிருஷ்ண மூர்த்தி, முத்துக்குமார், ஸ்ரீனிவாசன், ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story