தாராபுரத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு: அமைச்சர் கயல்விழி ஆய்வு

தாராபுரத்தில் மழை, வெள்ளம்  பாதிப்பு: அமைச்சர் கயல்விழி ஆய்வு
X

தாராபுரத்தில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, அமைச்சர் கயல்விழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், மழை வெள்ள பாதிப்புகளை, அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால், மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நகராட்சிக்கு உட்பட்ட வடதாரை, காமராஜபுரம், ஜல்லிக்குழி உள்ளிட்ட இடங்களில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளில் வசித்த, 100க்கும் மேற்பட்ட மக்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, இன்று பார்வையிட்டார். மக்களிடம் குறை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai based agriculture in india