தாராபுரத்தில் 3 நாட்களுக்கு பின் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரத்தில் 3 நாட்களுக்கு பின் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மழையால் நிரம்பிய குட்டை.

தாராபுரத்தில் மூன்று நாட்களுக்கு பின், நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய பருவமழை, கடந்த மூன்று நாட்களாக ஓய்ந்திருந்தது. இன்று மாலை, 4:30 மணிக்கு மேல் மழை பெய்தது.

மூன்று நாட்களுக்கு பின் மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், காலநிலையும் சற்றே மாறியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!