தாராபுரம்; கொழுமங்குளி கிராமத்தில் ரூ.1.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

தாராபுரம்; கொழுமங்குளி கிராமத்தில் ரூ.1.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
X

Tirupur News- தாராபுரத்தை அடுத்த கொழுமங்குளி கிராமத்தில் ரூ.1.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Tirupur News- தாராபுரம் கொழுமங்குளி கிராமத்தில் நடந்த முகாமில், 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராம சேவை மைய வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது இம்முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின், கலெக்டர் கூறியதாவது,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அரசுத்துறை அலுவலர்கள் அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வும் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

இந்த முகாமின் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது ஆகும். இந்த பகுதியில் உள்ள கிராமங்களான கொழுமங்குளி, அண்ணா நகர், ராசிபாளையம், கள்ளிப்பாளையம், தம்புரெட்டிபாளையம், ஆண்டிபாளையம், பேராங்காட்டுப்பதி, கள்ளிமேட்டுபாளையம், ஓரம்பபுதூர், கம்மாளபாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றிட வேண்டும்.

மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்கள் இங்கு பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர். அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். மேலும் கடைகோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்வதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும், என்றார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!