குண்டடம் பகுதியில், வரும் 13ம் தேதி மின்தடை

குண்டடம் பகுதியில், வரும் 13ம் தேதி மின்தடை
X

Tirupur News,Tirupur News Today - மின் பராமரிப்பு பணிகளுக்காக, வரும் 13ம் தேதி குண்டடம் பகுதியில், மின்தடை செய்யப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- மின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை மறுதினம் (13ம் தேதி) குண்டடம் பகுதியில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குண்டடம் துணை மின் நிலையத்தில் 13-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மறுதினம் 13ம் தேதியன்று, காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை பகுதிகள்;

சூரியநல்லூர், ராசிபாளையம், காதப்புள்ளப்பட்டி, எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை மின்தடை

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் நாளை (12-ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் 12ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

மின்தடை பகுதிகள்;

வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளி பெருக்கலாம்பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது, எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!