தபால் அலுவலக சேமிப்பு கணக்கு 'பான்' எண் இணைக்காவிட்டால் சிக்கல்

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு  பான் எண் இணைக்காவிட்டால் சிக்கல்
X

பைல் படம்.

தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மொபைல் எண் மற்றும் பான் எண்ணை தபால் அலுவலக கணக்குடன் இணைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவல சேமிப்பு கணக்கு சார்ந்த மோசடிகளை குறைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை தபால் துறை எடுத்துள்ளது. டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், கடன் பெறுதல், கடன் திருப்பி செலுத்துதல், கணக்கை மூடுதல் உள்ளிட்ட எந்தவொரு பரிவர்த்தனையும் தபால் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வித செயல்பாட்டிற்கு மொபைல் எண் மற்றும் பான் எண் அவசியம்.

இதுவரை மொபைல் எண், பான் எண்ணை தபால் அலுவலக கணக்கில், 'அப்டேட்' செய்யாதவர்கள் அல்லது மாற்றப்பட்ட மொபைல் எண்ணை மீண்டும் ஒருமுறை 'அப்டேட்' செய்துவிட வேண்டும். மேலும், 20 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் தொகை டெபாசிட் செய்தல், எடுத்தல், முதலீடு திட்டங்களில் கடனாக பெறுதல், பணப்பரிவர்த்தனை செய்தல் என, எந்தவிதமான செயல்பாட்டுக்கும் மொபைல் எண்ணை தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் சரிபார்க்கப்படும். தேவைப்பட்டால் பரிவர்த்தனையை தொடங்கும் முன் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

அதேபோல், 50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் இருந்தால், பரிவர்த்தனையை தொடங்குவதற்கு முன் பான் சரிபார்க்கப்படும் மற்றும் தேவைப்பட்டால் புதுப்பிக்க வேண்டும். பரிவர்த்தனை செய்ய வேண்டிய கணக்கில் மொபைல் எண், பான் புதுப்பிக்கப்படாவிட்டால், தபால் அலுவலகத்தில் இருந்தும்,ஆன்லைனில் இருந்தும் SB-103/SB-7/7A/7B/ படிவத்தை பயன்படுத்தி மொபைல் எண், பான் எண்ணை சேர்க்க வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும். அதே போல் நம்பரை மாற்ற வேண்டும் என்றாலும் அதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என, தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!