மக்கள் நீதிமன்றம் மூலம் 289 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றம்  மூலம் 289 வழக்குகளுக்கு தீர்வு
X
தாராபுரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
தாராபுரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 259 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

தாராபுரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 259 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மக்கள் நீதிமன்ற விசாரணையில் தாராபுரத்தில் இரண்டு அமர்வுகளில் உறவுகள் வழக்குகள் கையாளப்பட்டன.

இதில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சி. குமார் சரவணன், தலைமையில் நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எம். தர்மபிரபு முன்னிலை வகித்தார் உரிமையியல் நீதிபதி எஸ். ஆக்னஸ் ஜெயகிருபா, குற்றவியல் நடுவர் எஸ். பாபு ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், உரிமையியல் வழக்கு, குற்றவியல் வழக்குகள் என ரூ. 3.23 கோடி மதிப்பிலான 289 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!