தாராபுரத்தில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்

தாராபுரத்தில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள்  திமுகவில் ஐக்கியம்
X

தாராபுரத்தில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள்,  திமுகவில் இணைந்தனர்.

தாராபுரத்தில், பல்வேறு மாற்றுக் கட்சி நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் திமுக நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கல்தூண்ராம்ராஜ் மற்றும் அதிமுக தொழிற்சங்கத்தில் இருந்து விலகி சி. டி. தண்டபானி ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, 15வார்டு செயலாளர் சவுக்கத் அலி, பிரதிநிதிகள் சுரேஷ், சிவராஜ், நகர தொண்டரணி துணை அமைப்பாளர் பாலகுமார், விவசாய அணி ஜெகன்மோகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சுப்பிரமணி, இளைஞரணி மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!