ஊராட்சி தலைவர் கார் மீது லாரி மோதி விபத்து

ஊராட்சி தலைவர் கார் மீது லாரி மோதி விபத்து
X

விபத்தில் சேதமடைந்த கவுண்டிச்சிபுதூர் ஊராட்சி தலைவர் செல்விரமேஷ் கார்

தாராபுரம் அருகே ஊராட்சி தலைவர் கார் மீது, லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

கேரளாவிலிருந்து மினி லாரியில் வாழைக்காய் லோடு ஏற்றி கொண்டு தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்று கொண்டிருந்த லாரி, அலங்கியம் ரவுண்டானா அருகே வந்த போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கவுண்டிச்சிபுதூர் ஊராட்சி தலைவர் செல்வி ரமேஷ் கார் மீது மோதியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக காயமடைந்த கார் டிரைவரை, ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாராபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!