தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிலையம் திறப்பு

தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிலையம் திறப்பு
X
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்பி. கணேசமூர்த்தி, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு 50, ஆக்சிஜன் சிலிண்டர்களை அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 75, படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

மூலனூரில் கொரோனா நோயால் இறப்பவர்களின் உடல்களை எரிக்க கூடிய நகரும் எரிவாவு தகன வாகனத்தினை பார்வையிட்டனர். கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் நகரும் எரிவாயு தகன மேடை அறிமுகப்படுத்த வேண்டும் என தகனமேடை தயாரிப்பாளர்கள், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என, அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!