'ஆன்லைன்' வினாடி வினா! மாணவர்களே தயாரா?

ஆன்லைன் வினாடி வினா! மாணவர்களே தயாரா?
X

பைல் படம்.

‘இந்தியா சயின்ஸ்’ வாயிலாக, ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது.

'விஞ்ஞான் பிரசார்' நிறுவனம் மூலம், நாடு முழுவதும் அறிவியல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் பேரில், கொரோனா பேரிடர் காலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்கள், 'இந்தியா சயின்ஸ்' என்ற செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், 300க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த குறும்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வகையில், மூன்றாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. அதற்கு, 'கூகுள் பிளே' ஸ்டோரில், இந்தியா சயின்ஸ் என்ற 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து போட்டியில் பங்கேற்கலாம். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி, கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரம் அறிய, 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து