தாராபுரத்தில் புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம்: வனத்துறை அதிகாரி ஆய்வு
தாராபுரத்தில், வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தயாராக உள்ள நாற்றுகள்.
தாராபுரத்தில், புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், வனத்துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகளை, தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
தாராபுரம் பகுதியில் தமிழக அரசின் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், நாற்றாங்கால் அமைத்து, மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை, தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தாராபுரம் பகுதிக்கு, 21 ஆயிரம் மரக்கன்றுகள், அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேக்கு, ஈட்டி, வேம்பு, மருது, மலைவேம்பு, செம்மரம், சந்தன மரம் ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை மூலம் வளர்க்கப்படுகிறது.
ஆர்வமுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகள் வீதம் பெற்று, அதனை தங்கள் நிலங்களில் வளர்க்கலாம். நடவு செய்ய 50 மரக்கன்றுகளும், வயல்வெளியில் நடவு செய்ய 150 மரக்கன்று வரை பெறலாம். விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பெயரை, தாராபுரம் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu