நேதாஜி படையில் பணிபுரிந்தோருக்கு கவுரவம்
பைல் படம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான, இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிவர்களை கவுரவப்படுத்தும் நோக்கில் நகராட்சி ஆணையாளர் ராமர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவுபடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சுபாஷ் சந்திரபோசுக்கும், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, அந்தந்த ஊரிலுள்ள பூங்காக்கள், தெருக்கள் உள்ளிட்டவைகளுக்கு அந்த ராணுவத்தில் பணியாற்றியவர்களின் பெயர்கள் வைக்கப்படவிருப்பதால், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் யாராவது தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்ட பகுதியில் இருந்தாலோ அல்லது அவர்களை பற்றிய விபரம் அறிந்தவர்கள் இருந்தாலோ அதைப்பற்றிய விபரங்களை தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு, ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu