பேரிடர் பாதிப்பை தவிர்க்க உதவிக்கரம் நீட்டும் 'மொபைல் ஆப்'
மொபைல் செயலியில் இடம் பெற்றுள்ள வானிலை நிலவரம் .
தமிழகத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க, தமிழக அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள், அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளில், தாலுக்கா வாரியாக வருவாய்த்துறையினர் மற்றும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
உள்ளிட்ட பேரிடர் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அரசுத்துறையினர் அந்த 'மொபைல் ஆப்' மூலம், வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறிந்து, அதற்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு, 'TN-SMART' என்ற செயலியை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. இந்த செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தாலுகா வாரியாக, வானிலை விவரத்தை முழுமையாக அறிந்துக் கொள்ள முடியும்.
மழைப்பொழிவு விவரம், வானிலை முன்னறிவிப்பு, மழையளவு, பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளும், அதில் இடம் பெற்றுள்ளன. மீனவர்களுக்கான எச்சரிக்கை, மின்னல், சூறாவளி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு என அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
இதில், பச்சை அலர்ட், மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு ஆலர்ட், ரெட் அலர்ட் சார்ந்த விவரங்களையும் அறிந்துக் கொள்ள முடியும். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இந்த செயலி, வடிவமைக்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக, பேரிடர் சமயத்தில், அரசுத்துறையினருடன் இணைந்து, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ள தன்னார்வலர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்வதற்கான தளமும், இந்த செயலியில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu