தாராபுரத்தில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு; ஆற்றல் உணவகம் திறப்பு

Tirupur News- தாராபுரத்தில் ஆற்றல் உணவகம் திறப்பு விழா நடந்தது.தாராபுரம் பகுதியில் விரும்பியவருக்கு ரூபாய் 10 கட்டணத்தில் மூன்று வேளை தரமான உணவு வழங்கும் ஆற்றல் உணவகத்தை உலக அமைதி தூதுவர் குருமகான் அவர்கள் துவக்கி வைத்தார்.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் நகரில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் நேற்று தொடங்கப்பட்டது.
ஆற்றல் அறக்கட்டளை அமைப்பின் சாா்பில் ஈரோடு, குமாரபாளையம் பகுதியில் ரூ.10 க்கு உணவு வழங்கும் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரத்தில் ரூ.10-க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் நேற்று திறக்கப்பட்டது.
தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே, மேற்கு கச்சேரி வீதியில் உள்ள இந்த உணவகத்தை உடுமலை, திருமூா்த்தி மலைப் பகுதியில் உள்ள உலக சமாதான அறக்கட்டளை நிறுவனா் குரு மகான் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா் இந்த உணவகம் குறித்து கூறியதாவது,
10 ரூபாய் சேவைக் கட்டணத்தில் காலை உணவாக இட்லி, சட்னி, சாம்பாா் வழங்குகிறோம். இதேபோல ரூ.10 கட்டணத்தில் மதிய உணவாக சாப்பாடு, சாம்பாா், மோா், பொரியல் மற்றும் ரூ.10-க்கு இரவு உணவாக இட்லி, சட்னி, சாம்பாா் வழங்கப்படும்.
ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு. ஆற்றல் அசோக்குமார் முன்னிலையில் உலக அமைதி தூதுவர் குரு மகான் அவர்கள் ஆற்றல் உணவகத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஆற்றல் உணவகம், தாராபுரம் தாலுகா அலுவலகம் மேற்கு கச்சேரி வீதியிலுள்ள சுரேஷ் காம்ப்ளக்ஸில் பத்து ரூபாய் கட்டணத்தில் விரும்பியவர்களுக்கு காலை இட்லி, சட்னி, சாம்பார் தரமாக தயாரித்து பரிமாறப்பட உள்ளது விரும்பிய அளவு மக்கள் சாப்பிடலாம் .இதே போல் மதியம் சாப்பாடு, சாம்பார், மோர், பொரியல் மற்றும் ஊறுகாய் ரூபாய் பத்து கட்டணத்திலும் இரவு இட்லி, சட்டினி, சாம்பார் பரிமாறப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 1000க்கு மேற்பட்டவருக்கு உணவு தயாரித்து வழங்கப்படும். மாதத்திற்கு சுமார் 25 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளதாக திரு. ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.
ஆற்றல் மருத்துவமனை தாராபுரம் வடக்கு தெரு புனித செபஸ்தியார் ஆலயம் அருகில் ரூபாய் 10 சேவை கட்டணத்தில் காய்ச்சல், இருமல் ,சளி வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ,தொண்டை வலி உள்ளிட்ட 19 வகையான மருத்துவ பரிசோதனை தகுதிமிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு நோயோடு வருபவர்களுக்கு தாயாக நின்று மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021- ல் ஆற்றல் அறக்கட்டளை சமூக மற்றும் சமுதாய நல மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டு தாராபுரம் ,காங்கேயம், ஈரோடு ,மொடக்குறிச்சி, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவது ஆலயங்களை புணரமைப்பது கல்லூரி மாணவர்களின் திறனை ஊக்குவித்து கௌரவிப்பது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. மக்கள் சேவையின் மகுடமாக ஈரோடு மற்றும் குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில் ஆற்றல் உணவகம் மற்றும் மருத்துவமனைகளை ரூபாய் 10 சேவை கட்டணத்தில் தொடங்கப்பட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் மாதம் சுமார் 75 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக இன்று ஒரே நாளில் ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாகவும் மேலும் அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றும் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு. ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.
சாதாரண உணவகங்களில் ரூ. 50க்கு அளவு சாப்பாடும், மற்ற ஓட்டல்களில் ரூ.80 முதல் 100 ரூபாய்க்கும் புல் மீல்ஸ் சாப்பாடு வழங்கப்படுகிறது. இதுதவிர தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளிசாதம் போன்றவை ரூ. 40 என்ற விலைக்கு பரிமாறப்படுகிறது. ஆனால், ரூ. 10 ரூபாய்க்கு மதிய உணவாக சாதம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தவிர 10 ரூபாய்க்கு சட்னி, சாம்பாருடன் இட்லி வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சாதாரண ஓட்டல்களில் ரூ. 20க்கு ஒரு செட் இட்லி விற்கப்படுகிறது. மற்ற ஓட்டல்களில் ரூ. 30க்கும் விற்கப்படுகிறது. இந்நிலையில், 10 ரூபாய்க்கு உணவு, டிபன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu