மாரியம்மன் கோவில் திருவிழா: ஏகமனதாக முடிவு
தாராபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது மாரியம்மன் கோவில். கோவிலில் பங்குனி மாத தொடக்கத்திலிருந்து முப்பது நாளும் திருவிழா கோலமாக நடைபெறுவது வழக்கம்.
முன்பு திருவிழா தொடங்கும் 15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதல் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கும். அன்று முதல் தினசரி மாரியம்மனுக்கு அமராவதி ஆற்று தண்ணியை ஆண்கள் பெண்கள் குடங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வந்து அம்மன் சிலையில் ஊற்றி அம்மனை குளிர வைத்து என அனைவரும் புனித நீராடி வழிபடுவது வழக்கம். திருவிழாவின் கடைசி மூன்று நாட்கள் விரதமிருந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தி நேர்த்திக்கடனும் செலுத்துவர். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அதற்காக மணலில் உருவத்தை பொம்மையாக செய்து அம்மனுக்கு சாற்றுவது இங்கு வழக்கமாகவும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு திருவிழா கொரோனாவால் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேர்தல் நடத்தை முறைகள் அமலில் உள்ளது என கூறி பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் இரவு நேரத்தில் திருவிழாவை முழுமையாக நடத்த வேண்டும் அல்லது மூன்று நாட்களாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாரியம்மன் கோவில் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்பாக இந்து முன்னணியினரும் வரும் 14ந் தேதி தாராபுரத்தில் அண்ணா சிலை முன்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காமேஸ்வர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று தாராபுரம் துணை சூப்பிரண்டு ஜெயராம் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவது குறித்து ஏப்ரல் 1ஆம் தேதி முடிவு செய்யப்படும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அப்போது கோயில் நிர்வாக கமிட்டியினர், கட்டளைதாரர்கள், இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu