தாராபுரம்; மங்களாம்பாளையம் துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தாராபுரம்; மங்களாம்பாளையம் துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
X

Tirupur News,Tirupur News Today- மங்களாம்பாளையம் துர்க்கையம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்படுகிறது.  

Tirupur News,Tirupur News Today- மங்களாம்பாளையம் துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களாம்பாளையம் துர்க்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்டது மங்களாம்பாளையம். இங்கு ஊர் பொதுமக்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்ட துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாகுதி, கும்பம் புறப்பாடு நடந்து ஆலயம் வலம் வந்தது.

பின்னர் கோவில் ஸ்தூபி, கோபுரம், கோவில் மூலஸ்தான தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மங்களாம்பாளையத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் துர்க்கையம்மனுக்கு புதிதாக கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹா மண்டபத்துடன் கூடிய நூதன ஆலயம் அமைத்து விநாயகர், துர்க்கை, முனியப்பசாமி மற்றும் துர்க்கைபிடாரி அம்மனுக்கு நூதன விக்கிர பிரதிஸ்டை செய்து மகா கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது. பக்தி பரவசத்துடன், பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

விழாவில் மணக்கடவு, காளிபாளையம், குமாரபாளையம், மீனாட்சி, கொளத்துப்பாளையம், கரையூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்