தாராபுரம் - ஊரடங்கு விதி மீறிய 4 கடைகளுக்கு சீல்

தாராபுரம் - ஊரடங்கு விதி மீறிய 4 கடைகளுக்கு சீல்
X

கோப்பு படம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில், கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது.
அத்துடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியில், மாட்டிறைச்சி கடை இயங்குவதும், தளவாய்ப்பட்டினம் கிராமத்தில் ஒரு மளிகை கடையும், கன்னிவாடி அருகே புதுப்பை கிராமத்தில் 2 மளிகைக்கடைகளும் விதிகளை மீறி செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தாராபுரம் சப் கலெக்டரின் உத்தரவின் பேரில், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், இக்கடைகளுக்கு, வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்