உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை
X

அ.திமு.க., நிர்வாகிகள் மத்தியில், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன்

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும்’ என, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தாராபுரம் கரையூர் அழகர் பெருமாள் கோவில் மண்டபத்தில், கொளத்துப்பாளையம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பேரூராட்சி செயலாளர் செயலாளர் பைரவி, வரவேற்று பேசினார். பேரூராட்சி அவைத்தலைவர் சக்தி செந்தில், தலைமை வகித்தார். திருப்பூர் ஆவின் துணைத் தலைவர் சிவகுமார், நகர செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் பேசுகையில்,''கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், கடந்த, 2016 உள்ளாட்சி தேர்தலில், 15 வார்டுகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இம்முறை நடக்கவுள்ள தேர்தலிலும் வெற்றியை தக்க வைக்க வேண்டும்,'' என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!