தாராபுரத்தில் மது விற்பனை செய்த 2 பேர் கைது

தாராபுரத்தில் மது விற்பனை செய்த 2 பேர் கைது
X
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் இன்ஸ்பெக்டா் விநாயகம் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தாராபுரம் 5 காா்னாில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
ஒரு மது பாட்டிலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் விலை வைத்து, அவர்கள் விற்பனை செய்ததும் தொியவந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சோ்ந்த கண்ணன்,50 மற்றும் புதுக்கோட்டையை சோ்ந்த காா்த்திக் 32 என்பதும் தொியவந்தது.
மதுவிற்பனை செய்த அவா்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india