மணக்கடவில் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

மணக்கடவில் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
X
தாராபுரம், மணக்கடவில் பகுதியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மணக்கடவில் பகுதியில், நடந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு, 12வது வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, தலைமை வகித்து, துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஆதித்யன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணக்கடவி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, 8வது வார்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுகப்பரியா, மருத்துவ அலுவலர் தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்று பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். இதில், ஊராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்