வேலை வேண்டுமா? தாராபுரத்தில் நடக்கிறது வேலைவாய்ப்பு முகாம்

வேலை வேண்டுமா? தாராபுரத்தில் நடக்கிறது வேலைவாய்ப்பு  முகாம்
X

பைல் படம்.

தாராபுரத்தில், வரும், 30ம் தேதி தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை அறிவியல் கல்லுாரியில், வரும், 30ம் தேதி, தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்கள் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெற வேண்டும், என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா சமயத்தில், மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள், தற்போது சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கியுள்ளன. எனவே, வேலை வாய்ப்புகளை எளிதாக பெற முடியும் என, தொழில் துறையினரும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!