பெண்களிடம் நகை பறிப்பு; இருவர் கைது
கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் ஜெகதீஷ்.
Robbery Case -தாராபுரம் அருகே அரசு பணியாளர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 52). இவர் கடந்த ஆக., 2-ம் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர், ஈஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அதேபோல், உடுமலை ரோடு பகுதியில் வசிக்கும் சந்திரசேகர் மனைவி ஜெயசுதா (45). கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 14-ம் தேதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்றபோது, பைக்கில் வந்த இரண்டு பேர், கத்தியை காட்டி மிரட்டி ஜெயசுதா அணிந்திருந்த 5, பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், போலீசார் ஏரகம்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம் அணைக்கரைபட்டியை சேர்ந்த ராம்ராஜ் மகன் ஒண்டிவீரன் என்ற கார்த்திக், வயது (30) மடத்துக்குளம் கே.டி.எம். பகுதியை சேர்ந்த அப்பாதுரை மகன் ஜெகதீஷ் (27) என்றும், அவர்கள் இருவரும் ஈஸ்வரி மற்றும் ஜெயசுதா ஆகியோரிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 பவுன்நகையை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பல குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று, சிறையில் இருந்த போது நண்பர்களாக பழகியுள்ளனர். அதன் பிறகு நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்த இருவரும், கூட்டு சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu