நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ., கட்சியினர் தர்ணா

நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ., கட்சியினர் தர்ணா
X

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர்.

தாராபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில், பா.ஜ., கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. வீடுகள், கடைகளில் இருந்து தினசரி வெளியேற்றப்படும் குப்பைகள், மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது. இருப்பினும், கடந்த ஒரு மாதமாக குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை எனக் கூறி, பா.ஜ., கட்சியினர், நகராட்சி அலுவலக முகப்பில் தர்ணாவில் ஈடுபட்டனர். 'குப்பைகள் தேங்கி கிடப்பதால், டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால், உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்' என வற்புறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!