'அவசியம் ஓட்டு போடுங்க' கலைக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்டத்தில் ஓட்டு போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடை பெறுகிறது. அதையொட்டி வாக்களிப்பதன் அவசியத்ததை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இளம் வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் காலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன் அடிப்படையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், கடந்த தேர்தல்களில் குறைவாக வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் கலைக்குழுவின் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளுதல் ஆகியன செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கல்லூரி மாணவர்களைக் கொண்டு டூ வீலர் பேரணி, மனித சங்கிலி, பெண்களுக்கு கோலப்போட்டிகள், மெகந்தி இடுதல் போட்டிகள் ஆகிய நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்கள் கட்டப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான விஜயகார்த்திகேயன் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறார்.
மேலும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் எலெக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி செயல் விளக்க விழிப்புணர்வு வாகனத்தினை தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் துவக்கி வைத்து பார்வையிட்டார். காலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வின் போது, தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார், வட்டாட்சியர்கள் சுந்தரம் (திருப்பூர் தெற்கு), ரவிச்சந்திரன் (தாரபுரம்), திருப்பூர் மாநகராட்சி உதவிஆணையர்கள் சுப்பிரமணி, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu