காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அழைப்பு

தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழில் பிரிவுகளில், இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குறிப்பாக, 'டூல் அண்டு டை மேக்கர்' தொழிற்பிரிவில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும்.இதற்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் டூல் அண்ட் டை மேக்கர் மற்றும் என்.டி.சி., இன் டூல் அண்ட் டை மேக்கர் டிரேடு கல்வித்தகுதி. ஒயர்மேன் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இப்பணியிடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுகிறது.இதற்கு, டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், என்.டி.சி., இன் வயர்மேன் டிரேடு உள்ளிட்ட கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.தவிர, பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு, 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
பிளஸ் 2 முடித்து ஐடிஐ முடித்தவர்கள் உச்ச வயது வரம்பு இல்லை.தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர்களுக்கு, மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.தபால் வாயிலாக விண்ணப்பிப்போர், 'முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், தாராபுரம் -638657' என்ற முகவரிக்கு ஆக., 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu